-
mas template
Latest Poems
Showing posts with label புரட்சி கவிதைகள். Show all posts
Showing posts with label புரட்சி கவிதைகள். Show all posts

பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம்


பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம் கொண்டவனே தமிழா சாய்ந்து மண்ணில் கிடக்க நாம் என்னடா உக்கிய மரமா தேய்ந்து மூலையில் கிடக்க நாம் என்ன பழைய செருப்பா மாய்த்து வா பகையை ! எழுந்து பறை சாற்றி வா வெற்றியை.

நாமிருக்க நாடு இல்லை

Inthiran
 
ஆதவனால் வான் மதியும்
ஒளி மழையைப் பொழியுமே
சாதனையால் தமிழ்மொழியும்
கவிமழையில் நனையுமே
 
நாமிருக்க நாடு இல்லை
அதை எழுதிக் கிழிக்கவா
ஆம் அதற்குக் காரணம் யார்
எம்மவர் தான் பழிக்கவா ..!

மாவீரன் மடிவதில்லை


நாம் உறங்க தாம் விழித்து 
நமைக்காத்து உயிர்நீத்து
தாமுறங்கும் கல்லறையும் 
தகர்த்து எறியப்பட

தமிழர் நம் மனங்களில் குடிவாழும் 
தமிழ்த்தாய் பெற்றெடுத்த 
தன்னிகரில்லா தன்மான சின்னங்கள்

 உற்றவரும் உடன்பிறப்பும்  கண்மூடி தூங்குகையில்
சற்றும் தடையின்றி 
சுற்றிவரும் உங்கள் நினைவலைகள்

பற்றி எரியும் 
பெற்ற மனத்துயர்
மற்றவர்கள் யார் அறிவார்?

குற்றமிங்கு தமிழராக பிறந்ததென்று
குலை நடுங்கி குற்றுயிராய் செத்தொழியும் 
நிலை மாறி  
நீவீர் சிந்திய குருதியும்
விலையற்ற  தியாகமும் ஒருநாள் ஆளும்

கார்த்திகைப் பூக்கள்


சிந்திய இரத்தம்
செந்தூரம் பொங்கப்
பச்சைத் துரோகம்
பக்கத்திலிருக்க
வந்த கதிரொளி
வாராமல் போக மெல்ல
நொந்த கதை சொல்லும்
கார்த்திகைப் பூக்கள்

உதட்டுச் சாயம் தெரியாது.



உதட்டுச் சாயம் தெரியாது.
வளயல் குலுக்கத் தெரியாது.
ஜிமிக்கி போட தெரியாது.
மூக்குத்தியும் கிடையாது.
துப்பாக்கிதான் அவளோட ஆயுதம்..
மஞ்சல் பூசத் தெரியாது.
மயக்கும் வித்தை தெரியாது..
கொசுவம் கட்ட தெரியாது..
குங்கும பொட்டும் கிடையாது...
தமிழினமே அவளோட உறவடா
ஜயோ தெய்வம் கூட இவளைவிட குறைவடா..
வாசல் தெளிக்க ஆசைதான் வீடு
இல்லை நண்பா!
பாசம் காட்ட மனசு உண்டு பெற்றோர் இல்லை நண்பா!
பயணம் செய்ய ஆசையுண்டு பாதை இல்லை நண்பா!
மீட்க ஈழமொன்றே உண்டு வேட்கை கொண்டால் நண்பா.."""
(பெண் போராளிகளின் குணத்தை உணர்த்தும் பாடல் வரி இது)
 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com