-

நீ வாழும் உலகம்..!

{[['']]}
 
கவி884
 
இதயம் கனக்கும் பொழுதுகள்
எல்லாம்  கண்ணீரோடு
சேர்த்து என் காயத்தையும்
வாங்கிக்கொண்டாய்.!
 
அந்த மலரும் நினைவுகள்
இதயத்தை வருடும் பொழுதுகளில் 
உந்தன் பிரிவால் எந்தன்
ஜீவன் வாடுது கண்ணே.!
 
பிரிவில் பலவகை உண்டு
அதில் ஒன்றாய் நீ மீண்டும்
எனக்காய் வருவாய்  என
எண்ணற்ற விம்பங்கள்
எனக்குள் தோன்றுதம்மா.!
 
காத்திருப்பதால் கடிகாரமது
பின்னே சுழன்று ஒடி மறைந்த
காலமதை மீண்டும் நம்
கரங்களில் சேர்த்திடுமா .!
 
இல்லை  காலங்கள் ஓடி
கடமைகள் முடித்தபின்
விதியின் பெயர் சொல்லி
என் பிரியமான நீ
வாழும் உலகம்.!
 
நானும் வர வரம்தான்
வந்திடுமா என ஏங்கும்
மனதிற்கு கண்ணீர் மட்டுமே
ஆறுதலாய் என் கன்னம்
வருடிச்செல்லுதடி
என் தோழி.!
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com