-

உடையக் காத்திருக்கும் மனசு

{[['']]}
 
காற்றை தன்னுள்
அடக்கி வைத்திருக்கும்
ஒரு பலுன் வெடிக்கக்
காத்திருப்பது போல்
உன் நினைவுகளை
அடக்கி காத்திருக்கும்
என் இதயமும் ஒரு நாள் .
வெடித்துச் சிதறலாம்
அப்போது சில சில்லுகள்
வந்து உன்னையும்
தாக்கக் கூடும் அழுதுவிடாதே
 
கண்ணுக்குப் புலப்படா
விடினும்
அழுக்கான அழக்
காத்திருக்கும் ஒரு
மேகத்தின் நிழலில்
ஒர் துண்டு வானத்தில்
எனதான நேசம்
தொங்க விடப்பட்டிருக்கும்
 
சிணுங்கும் செல்ல
மழைத் துளிகள்
உன் கால்களைத்
தரிசிக்கக் கூடும்
கடிந்து விடாதே
அவைகள் என்
அன்பின் கரைசல்களாகக்
கூட இருக்கலாம்
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com