-
mas template
Latest Poems
Showing posts with label குட்டிக் கவிதைகள். Show all posts
Showing posts with label குட்டிக் கவிதைகள். Show all posts

விடிவு

சுஜாதா
 
கண்ணை மூடி இருந்துவிட்டால்
காலையில் சூரியன் உதியானா?
மனதை நீதான் பூட்டிவிட்டால்
மனதில் நினைவும் மலராதா?
கதவைப் பூட்டி நீயிருந்தால்
காளையவன் தான் உடையானா?
காலம் நமக்கு வந்துவிட்டால்
கனவும் நனவா மாறாதா?

கோவில்

சுஜாதா
 
மக்களின் காணிக்கை
மாக்களின் வேடிக்கை
அரசனின் கோரிக்கை
ஆண்டியின் வாடிக்கை 

பெண்

சுஜாதா
 
பார்வைக்கு அழகானவள்
பண்பிற்குப் புதிரானவள்
பாசத்திற்குத் தாயானவள்
பணிவிற்கு நிகரானவள்

கன்னித் தமிழே வாழ்க

Inthiran
 
சதிராடும் தமிழே உன்னைப்
புதிராகப் பார்க்கின்றேன் உனக்கு
எதிராக இருப்போரை
ஏமாந்து போகச்செய்யும்
கதிராக இருக்கின்றாய் என்
கன்னித் தமிழே நீ வாழ்க
 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com